2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

யானை தாக்கியதில் பிரஜைகள் குழுவினர் அறுவர் காயம்

George   / 2014 ஒக்டோபர் 27 , பி.ப. 04:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்
 
இலங்கையில் காணாமல் போனவர்களின் தேசிய நினைவு தின ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக வவுனியாவிலிருந்து சென்ற வவுனியா பிரஜைகள் குழு உறுப்பினர்கள் அறுவர் யானையால் தாக்கப்பட்டு காயமடைந்துள்ளனர். 
 
இது தொடர்பில் வவுனியா மாவட்ட பிரஜைகள் குழுத்தலைவர் கே.தேவராஜா தெரிவிக்கையில்,
 
அண்மையில் இனந்தெரியாதோரால் நான் தாக்கப்பட்டமையால் சீதுவையில் இடம்பெறவுள்ள ஆர்ப்பாட்டத்திற்காக செயலாளர் தலைமையிலான 15 பேர் கொண்ட குழு வவுனியாவில் இருந்து சென்றிருந்தது.
 
இந் நிலையில் புத்தளம், நொச்சியாகமவுக்கும் 12ஆம் கட்டைப் பகுதிக்கும் இடையில் யானை இவர்கள் சென்ற வாகனத்தை தாக்கியுள்ளது. 
 
இவர்கள் பயணித்த வாகனம் முற்றாகச் சேதமடைந்த நிலையில் புத்தளம் பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.
 
யானை தாக்குதலுக்குள்ளானவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வவுனியாவுக்கு இன்று திரும்பியுள்ளதாக  அவர் மேலும் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .