2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

திருக்கேதீஸ்வரம் வரை பரீட்சார்த்த ரயில் சேவை

Menaka Mookandi   / 2014 ஒக்டோபர் 31 , மு.ப. 08:54 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மடு ரயில் நிலையத்திலிருந்து மன்னார், திருக்கேதீஸ்வரம் ரயில் நிலையம் வரையிலான பரீட்சார்த்த ரயில் சேவை இன்று வெள்ளிக்கிழமை (31) காலை நடத்தப்பட்டது.

இன்று காலை 10 மணியளவில் மடு ரயில் நிலையத்திலிருந்து பரீட்சார்த்த சேவையை ஆரம்பித்த ரயில், 10.30 மணிக்கு திருக்கேதீஸ்வரம் ரயில் நிலையத்தை அடைந்தது.

மடு ரயில் நிலையத்திலிருந்து தலைமன்னார் ரயில் நிலையம் வரை 63 கிலோ மீற்றர் தூரம் உள்ளது. மடு ரயில் நிலையத்திலிருந்து திருக்கேதீஸ்வரம் நிலையம் வரைக்குமான 26 கிலோ மீற்றர் தூரத்துக்கான சேவை இடம்பெற்றது.

இந்த ஆரம்ப நிகழ்வில், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்டான்லி டி மேல், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் ஸ்ரீ பாஸ்கரன் புகையிரத திணைக்கள அதிகாரிகள், மன்னார் பொலிஸ் நிலைய அதிகாரிகள், திணைக்களத்தின் பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .