2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சமூக அணிதிரட்டல் பயிற்சி

Gavitha   / 2014 நவம்பர் 01 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள நலிவுற்றவர்களைக் கட்டியெழுப்புகின்ற மாதிரிக்கிராமத்தில் கடமை புரியும் கள உத்தியோகஸ்தர்களுக்கான இருநாள் சமூக அணிதிரட்டல் பயிற்சி கடந்த புதன்கிழமை (29) மற்றும் வியாழக்கிழமை (30) ஆகிய தினங்களில், கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சில் உள்ள தேசிய மனிதவள அபிவிருத்தி சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இப்பயிற்சியினை இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் சி.தணிகசீலன் கலந்து கொண்டு ஆரம்பித்தார்.

இதன்போது, சமூக அபிவிருத்திக்கான தேசிய நிறுவகத்தின் விரிவுரையாளர் வ.ஜெயரூபன், தேசிய மனிதவள அபிவிருத்தி சபையின் ஆய்வு உத்தியோகத்தர் த.செந்தில்நாதன் ஆகியோர் வளவாளர்களாகக் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கினர் .

2013ஆம் ஆண்டில் கிளிநொச்சி மாவட்டத்தில் நடத்தப்பட்ட நலிவுற்றவர்களின் மீதான கற்கை ஒன்றின் அடிப்படையில் கண்டறியப்பட்ட முன்னுரிமைப்படுத்தப்பட்ட தேவைகளான, உளவியல் சார்ந்த மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான தேவை மற்றும் சமூக அணிதிரட்டல் தேவை என்பன அடையாளம் காணப்பட்டிருந்தன.

இவற்றை அமுல்படுத்தும் வகையில் கரச்சி, கண்டாவளை, பச்சிலைப்பளை மற்றும் பூநகரி பிரதேசங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட கிராமங்களான அம்பாள் நகர், பரந்தன், தம்பகாமம் மற்றும் பள்ளிக்குடா ஆகிய கிராமசேவகர் பிரிவுகளில் கள உத்தியோகத்தர்களாக வேலைசெய்யும் சுமார் 44 அரச உத்தியோகஸ்தர்களுக்கான பயிற்சியினை, ஸ்ரோம் பௌண்டேசனுடன் எனும் அமைப்புடன் இணைந்து இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு நடாத்தியது.

சமூகத்தில் மக்களிடையே கட்டியெழுப்பும் ஆளுமையினை உயர்துவதனை நோக்காகக் கொண்டு, திறன்மிக்க உத்தியோகஸ்தர்களை உருவாக்கி, இதன் மூலம் மாதிரிக்கிராமங்களில் மக்களை வழுவூட்டுவதன் மூலம், நலிவுற்றவர்களின் வாழ்க்கைத்தரத்தை மீள் எழுச்சி பெறச் செய்யும் ஒரு நீடித்த அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு இந்தப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றதாக இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் சி.தணிகசீலன் கூறினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .