2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தேங்காய் திருடனுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2014 நவம்பர் 01 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கேப்பாப்பிலவு பிரதேசத்திலுள்ள தோட்டமொன்றில், ஒரு தொகை தேங்காய்களை திருடியதாகக் கூறப்படும் சந்தேக நபரை எதிர்வரும் திங்கட்கிழமை (03) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, முல்லைத்தீவு மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா வெள்ளிக்கிழமை (31) உத்தரவிட்டுள்ளார்.

கேப்பாப்பிலவு பிரதேசத்திலுள்ள குறித்த தோட்டத்தில் சந்தேக நபரும் மற்றுமொறு நபரும் சேர்ந்து தேங்காய்களை திருடிச் சென்றுள்ளனர்.

இவ்வாறு குறித்த இரு சந்தேக நபர்களும் தேங்காய்களை திருடிச் செல்வதை அவதானித்த தோட்டத்தில் பணிபுரியும் முதியவர் ஒருவர் இது தொடர்பில் முள்ளியவளை பொலிஸில் முறைப்பாடு ஒன்றை செய்துள்ளார்.

அந்த முறைப்பாட்டின் அடிப்படையில், விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் சந்தேக நபர்களில் ஒருவரை வியாழக்கிழமை (30) மாலை கைது செய்துள்ளனர். மற்றையவர் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் தலைமறைவாகியுள்ள இரண்டாவது சந்தேக நபரை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேக நபரை வெள்ளிக்கிழமை (31) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, அவரை திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .