கொஸ்லந்த, மீரியாபெத்த பகுதியில் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பொருட்களை சேகரிக்கும் பணி மன்னார் பகுதியில் மும்முரமாக தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக, மன்னார் நகர சபையின் உறுப்பினர் இரட்ணசிங்கம் குமரேஸ் தெரிவித்தார்.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக, உலர் உணவுப்பொருட்கள், உடை வகைகள் மற்றும் பணம் ஆகியவை மன்னார் மக்களிடமும் வர்த்தகர்களிடமும் கடந்த சனிக்கிழமை (01) முதல் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் சேகரிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த சனிக்கிழமை (01) ஆரம்பிக்கப்பட்ட குறித்த நிவாரணம் சேகரிக்கும் பணி எதிர்வரும் 5ஆம் திகதி வரை இடம் பெறவுள்ளது.
சேகரிக்கப்படும் பொருட்கள் பொதி செய்யப்பட்டு எதிர்வரும் 06ஆம் திகதி வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில் மன்னாரிலிருந்து செல்லும் குழுவினரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக வழங்கி வைக்கப்படவுள்ளது.
மன்னார் மக்களும் வர்த்தகர்களும் போதிய அளவு ஆதரவையும் உதவிகளையும் வழங்கி வருவதாக நகர சபை உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள்.
.