2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மூன்றுமுறிப்பு பொதுநோக்கு மண்டப புனரமைப்பு பணி பூர்த்தி

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 03 , மு.ப. 08:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


- சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் மூன்றுமுறிப்புக் கிராமத்தில் உலக வங்கியின் நிதியுதவியுடன் நியாப் திட்டத்தின் கீழ் 1.1 மில்லியன் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுவந்த பொதுநோக்கு மண்டப  கட்டடப் பணி பூர்த்தியடைந்துள்ளதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் ரி.பிருந்தாகரன் திங்கட்கிழமை (03) தெரிவித்தார்.

இந்தப் பொதுநோக்கு மண்டபம் விரைவில் திறந்துவைக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு விடப்படும் எனவும் அவர்  தெரிவித்தார்.
மேற்படி பகுதியில் ஏற்கெனவே இருந்த பொதுநோக்கு மண்டபம், இறுதிக்கட்ட யுத்தத்தில் பலத்த சேதமடைந்தது. இதனால், ஆரம்ப சுகாதார தேவைகள் மற்றும் கிராம மட்ட அமைப்புக்களுடனான கலந்துரையாடல்களை மேற்கொள்ள மண்டபம்  இல்லாதிருந்தது.

இந்த நிலையில்,  சேதமடைந்த இந்த  மண்டபத்தை புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.  இவர்களின் கோரிக்கைக்கு அமைய  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இவ்வருட ஜனவரி மாதத்திலிருந்து புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .