2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வவுனிக்குளத்தை புனரமைத்தமையால் நெற்செய்கை அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 03 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு வவுனிக்குளம் புனரமைக்கப்பட்டமையால் இம்முறை காலபோகத்தில் அதன் கீழ் 6 ஆயிரத்து 60 ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வவுனிக்குளம் நீர்ப்பாசன பொறியியலாளர் திங்கட்கிழமை (03) தெரிவித்தார்.

வவுனிக்குளம் புனரமைக்கப்படாமல் இருந்தமையால் குளத்தின் நீர்ப்பாசன வாய்க்கால்களும் சேதமடைந்து காணப்பட்டன.இதனால், 4 ஆயிரம் ஏக்கரில் மாத்திரம் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது. நெற்செய்கை மேற்கொள்ளக்கூடிய 2 ஆயிரம் ஏக்கர்வரை நெற்செய்கை மேற்கொள்ளப்படாமல் இருந்தது.

இந்நிலையில், முரண்பாடுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளை அபிவிருத்தி செய்யும் திட்டத்தின் கீழ் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 600 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் 2013ஆம் ஆண்டு வவுனிக்குளம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

முன்னர் 24 அடி கொள்ளளவை கொண்டதாக இருந்த வவுனிக்குளம், தற்போது 25 அடி நீரை கொள்ளக்கூடியதாக புனரமைக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குளத்தின் வாய்க்கால்களும் சீரான முறையில் புனரமைக்கப்பட்டுள்ளன. அணைக்கட்டு, வான்பகுதி என்பன உயர்த்;துதல், நீர் விநியோக வாய்க்கால்கள் புனரமைத்தல் போன்ற செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

புனரமைப்பு பணிகள் இந்த வருட ஆரம்பத்தில் முழுவதுமாக முடிவடைந்தன.

இதன் பின்னர்,  தற்போது  மேலதிகமாக 2060 ஏக்கரில் கூடுதலான நெற்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது.

இதன் மூலம், முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட 2100 விவசாய குடும்பங்கள் பயனடைவார்கள் என பொறியியலாளர் மேலும் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .