2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இன ஒற்றுமையை மேடைகளில் பேசாது செயற்பாட்டில் காட்டவேண்டும்: டெனிஸ்வரன்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 04 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-பொ. சோபிகா

இன ஒற்றுமை பற்றி மேடைகளில் பேசாது, செயற்பாட்டில் காட்டவேண்டும் என வட மாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி மற்றும் வர்த்தக வாணிப அமைச்சர் பா.டெனிஸ்வரன் தெரிவித்தார்.

வவுனியா மாவட்ட வெங்கலச் செட்டிக்குளம் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட முகத்தாங்குளம், மருதமடு ஆகிய குளங்களில் சுமார் 90,000 நன்னீர் மீன்குஞ்சுகள், திங்கட்கிழமை (03) விடப்பட்டன. இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் கூறியதாவது,

மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன், வட மாகாணத்தில் உள்ள குளங்களில் மீன்குஞ்சுகள் விடப்படுகின்றன. இன, மத வேறுபாடின்றியும் பிரதேசவாதம் இன்றியும் வடக்கு மக்களுக்கு சமமாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

வட பகுதியில் அரசாங்கத்தினாலும் ஆக்கிரமிப்பாளர்களினாலும் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. இனிவரும் காலங்களில் இக்காணி அபகரிப்பை தடுத்து நிறுத்த அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .