2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 04 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பதுளை, கொஸ்லந்த, மீரியபெத்தயில் ஏற்பட்ட பாரிய மண்சரிவு காரணமாக உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்திக்காவும், பாதிக்கப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காகவும் கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தால் பிரார்த்தனைகள் செவ்வாய்க்கிழமை (04) இடம்பெற்றது.
 
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தில் காலை 9.30 மணிக்கும் தொடர்ந்து கிளிநொச்சி தென்னிந்திய திருச்சபையிலும் பிரார்த்தனை நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்த பிரார்த்தனையில் அனர்த்தத்தால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எதிர்கால நலன்தொடர்பிலும் வேண்டப்பட்டது. இந்நிகழ்வில் சமய பெரியார்கள், ஊடகவியலாளர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .