2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

முல்லை விபத்தில் இருவர் பலி; மூவர் காயம்

Gavitha   / 2014 நவம்பர் 05 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}


-மாணிக்கப்போடி சசிகுமார்

முல்லைத்தீவு ஏ-9 வீதி பனிக்கங்குளத்தில், இன்று (05) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் பலியானதுடன், 3 பேர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏ-9 வீதி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கி இன்று மாலை 4.00 மணியளவில் பயணித்துக்கொண்டிருந்த கார், வேகக் கட்டுப்பாட்டை மீறி வீதியை விட்டு விலகி சுமார் 75 மீற்றர் வரை புரண்டு சென்றதால், காரில் பயணித்துக்கொண்டிருந்த 5 பேரில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பலியானதுடன் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்குச் சென்ற மாங்குளப் பொலிஸார் சடலங்களையும் காயமடைந்தவர்களையும் மீட்டு கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக, போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .