2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கிளி பிள்ளைகளுக்கு தென்னம்பிள்ளை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 07 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.தபேந்திரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு பிறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு தலா 2 தென்னம் கன்றுகள் வழங்கப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட தென்னை அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஜெ.சத்தியேந்திரா வெள்ளிக்கிழமை (07) தெரிவித்தார்.

'கற்பக தரு பரம்பரை' (கப்புறுக பரப்புர) திட்டத்தின் கீழ் இந்த தென்னங்கன்றுகள் வழங்கப்படவுள்ளன.  அத்துடன், கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள வணக்கஸ்தலங்களுக்கும் தலா 10 தென்னம் கன்றுகள் வீதம் வழங்கப்படவுள்ளன.

ஆகையால், வணக்கஸ்தலங்களின் நிர்வாகிகள் கடிதம் மூலம் விண்ணப்பிப்பதன் மூலம் இந்த தென்னங்கன்றுகளை பெற்றுக்கொள்ள முடியும்.

தென்னம் கன்றுகள் வழங்கும் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (10) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .