2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சமூர்த்தி அலுவலக ஆவணங்கள் தீக்கிரை

Gavitha   / 2014 நவம்பர் 08 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா சின்னப்புதுக்குளம் பகுதியில் அமைந்திருக்கும் சமூர்த்தி அலுவலகம் இன்று (08) காலை இனம் தெரியாதவர்களினால்  தீவைக்கப்பட்டுள்ளது.

வவுனியா சின்னப்புதுக்குளம் பகுதியில் அமைந்திருக்கும் சமூர்த்தி அலுவலகத்தில், இன்று (08) சிரமதான வேலைக்கு சென்றவர்கள் அங்கு சிரமதானம் செய்து கொண்டிருக்கும் போது, சமூர்த்தி அலுவலக யன்னல் ஊடாக புகை வந்ததை அவதானித்ததையடுத்து வவுனியா பொலிஸாருக்கு தொலைபேசி மூலம் முறைப்பாடு செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட போது சமூர்த்தி அலுவலகத்தின் யன்னல்கள் உடைக்கப்பட்டு அங்கிருந்த சமூர்த்தி ஆவணங்கள் பல தீமூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .