2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கட்டுப்பாட்டு விலையில் உரம் பெறமுடியும்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 09 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள், மேற்பட்ட நிலப்பரப்பிற்கு தேவையான உரத்தை கட்டுப்பாட்டு விலையில் கமநல சேவை நிலையங்களிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும் என கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.தயாரூபன் ஞாயிற்றுக்கிழமை (09) தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் 5 ஏக்கருக்கு குறைவான நிலப்பரப்பில் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, கமநல சேவை நிலையங்கள் ஊடாக மானிய அடிப்படையில் உரங்கள் வழங்கப்படுகின்றது.

5 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பில் நெற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகள், 5 ஏக்கருக்கு மேற்பட்ட நிலப்பரப்பிற்கான நெல்லை தனியார் கடைகளில் அதிகூடிய விலையில் கொள்வனவு செய்வதாக எமக்கு தகவல் கிடைக்கப்பெற்றது.

இருந்தும், கமநல சேவை நிலையங்களில் போதியளவு உரங்கள் கையிருப்பில் இருக்கின்றது. அவ்வரங்களை ஒரு மூடை (50 கிலோ) ஆயிரத்து 200 ரூபாய் என்ற கட்டுப்பாட்டு விலையில் விவசாயிகள் பெறமுடியும்.

ஆகவே, 5 ஏக்கருக்கு அதிகமான நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் கமநல சேவை நிலையங்களில் 1200 ரூபாய் கட்டுப்பாட்டு விலையில் உரத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .