2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் மீனவர்கள் கண்டன ஊர்வலம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 10 , மு.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்;னவுக்கு எதிராக தென்பகுதியில் கடற்றொழிலாளர்கள் மேற்கொண்டுவரும் எதிர்ப்பை  கண்டித்து கண்டன ஊர்வலத்தில்  மன்னார் மாவட்ட மீனவர்கள்  இன்று(10) திங்கட்கிழமை  ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்ட மீனவ கடற்றொழில் சம்மேளனமும் மன்னார் மாவட்டத்தில் உள்ள கிராமிய அமைப்புக்களும் இணைந்து இந்த கண்டன ஊர்வலத்தை மேற்கொண்டன.

மன்னார் பஸார் பகுதியில் ஆரம்பமாகிய கண்டன ஊர்வலம்,  மன்னார் நீதிமன்ற வீதியூடாக அமைதியாக சென்று பின் மன்னார் மாவட்ட கடற்றொழில் திணைக்களத்தை சென்றடைந்தது. இதில் நூற்றுக்கணக்கான மீனவர்கள் கலந்துகொண்டு பதாதைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.

தங்களது கோரிக்கை அடங்கிய மகஜரை கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் மீனவர்கள் சார்பாக மன்னார் மாவட்ட கிராமிய கடற்றொழில் சம்மேளனத் தலைவர் ஏ.ஜஸ்ரின் சொய்சா கையளித்தார்.

கடற்றொழில் அமைச்சர் ராஜித சேனாரத்தின, மன்னார் மாவட்ட மீனவர்களுக்கு பல்வேறு உதவிகளை மேற்கொண்டுவரும் வகையிலும் சிறுபான்மையின மக்களுக்காக குரல் கொடுத்துவரும் வகையிலும்; அவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் செயற்பாடுகளை தாம் கண்டிப்பதாக மன்னார் மாவட்ட மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .