2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

'தனிநபர் கடற்றொழில் அமைப்புக்கள் ஊக்குவிக்கப்படுகின்றன'

Thipaan   / 2014 நவம்பர் 11 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

மன்னார் மாவட்டத்தில் தனிநபர் கடற்றொழில் அமைப்புக்களை ஊக்குவித்துவருவதாக மன்னார் மாவட்ட நீர் வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரி பா.நிருபராஜ், செவ்வாய்க்கிழமை (11) தெரிவித்தார்.

எனவே, கடற்றொழில் சார்ந்த அமைப்புக்களான இளைஞர் அமைப்பு, பெண்கள் கிராம அபிவிருத்திச்சங்கம் முதலான அமைப்புக்களை ஊக்குவித்து வருகிறோம்.

அந்த வகையில் கடலட்டை, கொடுவா மீன், பாலை மீன் உள்ளிட்ட மீன்வளர்ப்பு முறைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தற்போது கொடுவா மீன் வளர்ப்பு 12 ஏக்கர் கடற்பரப்பிலும் பாலை மீன் வளர்ப்பு 24 ஏக்கர் கடற்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவ் வகையான மீன் உற்பத்திகளை மேற்கொள்வதற்கு பெரிய அளவிலான முதலீடுகள் தேவை. எனவே இங்கு தனிநபர் முதலீடுகளை மேற்கொள்ளும்போது பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .