2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கி ரவைகளை வைத்திருந்தவருக்கு விளக்கமறியல்

Thipaan   / 2014 நவம்பர் 11 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

ரி-56 ரக துப்பாக்கி ரவைகள் 325ஐ வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் மாணிக்கவாசகர் கணேசராஜா, திங்கட்கிழமை(10) உத்தரவிட்டார்.

முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீராவிப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு பிரதேசத்திலுள்ள வயலில் இருந்து துப்பாக்கி ரவைகளை எடுத்துள்ள இவர், நீராவிப்பிட்டியிலுள்ள தன்னுடைய வீட்டில்  அவற்றை வைத்திருக்கிறார்.

இது தொடர்பாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அவ்வீட்டை பரிசோதனை செய்த பொலிஸார், அங்கிருந்து  ரவைகளை கைப்பற்றியதுடன், சந்தேகத்தின் பேரில் குறித்த நபரை நேற்று காலை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தினர்.

இதன்போதே சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .