2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

நெற்செய்கை காணிகள் துப்புரவு

Menaka Mookandi   / 2014 நவம்பர் 11 , மு.ப. 07:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நெற்செய்கை மேற்கொள்ளப்படாமல் தரிசு நிலக்காடுகளாக காணப்பட்ட 1697.5 ஏக்கர் நிலம், உலக உணவு ஸ்தபானத்தின் நிதியுதவியுடன் துப்புரவு செய்யப்பட்டு வருவதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யுத்த காலத்தில் பயிர் செய்கைக்கு உட்படுத்தப்படாமல் நீண்ட காலமாக தரிசு நிலக்காடுகளாக காணப்பட்ட வயல் நிலங்களை, மீள் செய்கைகளுக்கு உட்படுத்தும் வகையில் அவற்றை துப்பரவு செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள 122.5 ஏக்கர் நிலம், பாண்டியன்குளம் கமநல நிலையத்தின் கீழுள்ள 128.5 ஏக்கர் நிலம், கொக்கு தொடுவாய் கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள 291 ஏக்கர் நிலம், ஒட்டிசுட்டான் கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள 1025 ஏக்கர் நிலம், ஒலுமடு கமநல சேவை நிலையத்தின் கீழுள்ள 130.5 ஏக்கர் நிலம் என 1697.5 ஏக்கர் நிலப்பரப்பு இவ்வாறு துப்பரவு செய்யப்படுகின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .