2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் கடற்பாசி உற்பத்தி சாத்தியமளிக்கவில்லை

Menaka Mookandi   / 2014 நவம்பர் 12 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-யோ.வித்தியா

மன்னார் மாவட்டத்தில் கடற்பாசி உற்பத்தி பெரியளவில் சாத்தியமளிக்கவில்லை என மன்னார் மாவட்ட நீர் வளர்ப்பு அபிவிருத்தி அதிகாரி பா.நிருபராஜ் புதன்கிழமை (12) தெரிவித்தார்.

மன்னார் கடல், அதிக அலைகள் கொண்ட கடலாக காணப்படுகின்றது. அத்துடன், கடல் நீரின் உப்புத்தன்மையிலும் மாற்றம் ஏற்படுகின்றது. இதனால், இங்கு கடற்பாசி உற்பத்திக்கான சாத்தியப்பாடுகள் குறைவாகவே உள்ளது.

ஆயினும் சவுத்பார், வங்காலை, மாந்தை கிழக்கு ஆகிய இடங்களில் பருவ காலத்திற்கு ஏற்ப இந்த கடற்பாசி உற்பத்தியை மேற்கொள்ள முடியும்.

நவம்பர், டிசம்பர் (மழைக் காலங்கள்) மாதங்களில் கடல் நீரின் உவர்தன்மை குறைவடையும் என்பதால் அந்தக்காலங்களில் கடற்பாசி உற்பத்தியை மேற்கொள்ள முடியாது.

மன்னார் கடல் நீரில் கடல் உயிரினங்கள் வளர்ப்பு தொடர்பான செயற்றிட்டத்தின் ஆரம்ப கட்ட வேலைகள் 2011ஆம் ஆண்டு முதல் 2012 காலப்பகுதிவரை மேற்கொள்ளப்பட்ட போதும், அது பெரிய அளவில் வெற்றியளிக்கவில்லை.

ஆயினும் சிலவகையான (கொடுவா, பாலை மீன்) மீன் இனங்கள் வளர்ப்பு தற்போது வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .