2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அனர்த்தத்தின் போது உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி

George   / 2014 நவம்பர் 15 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.தபேந்திரன்


கடந்த கால அனர்த்தத்தின போது உயிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு கரித்தாஸ் கியூடெக் நிறுவனத்தின் கிளிநொச்சி கிளையின் ஏற்பாட்டில், கிளிநொச்சி சென் திரேசாள் கலை கல்லூரி மண்டபத்தில் வெள்ளிக்கிழமை (14) நடைபெற்றது.

கிறிஸ்தவ, இந்து, பௌத்த, இஸ்லாமிய மத குருமார்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ஆத்ம சாந்தி பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.

கடந்த கால இயற்கை அனர்த்தங்கள், போர் ஆகியவற்றால் இறந்தவர்களுக்கு தீப அஞ்சலி, மலர் அஞ்சலி, மௌன பிரார்த்தனை ஆகியனவும் இதன்போது இடம்பெற்றன.

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர் ச.மோகனபவன், கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் வே.தபேந்திரன், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .