2025 ஜூலை 14, திங்கட்கிழமை

சிறுவர் பூங்கா விரைவில் திறப்பு

Sudharshini   / 2014 நவம்பர் 15 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு, கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட, முல்லைத்தீவு பகுதியில் புதிதாக நிர்மானிக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்கா விரைவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்படவுள்ளதென, கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சு.ரவீந்திரநாதன் வியாழக்கிழமை (13) தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் சிறுவர் பூங்காவொன்றை அமைத்து தருமாறு  பிரதேசவாசிகள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், புறநெகும நெல்சிப் திட்டத்தினூடாக குறித்த சிறுவர் பூங்கா நிர்மானிக்கப்பட்டுள்ளது.

இச்சிறுவர் பூங்காவின் நிர்மானப்பணிகளுக்காக 8.5 மில்லியன் ரூபாய் நிதி செலவிடப்பட்டுள்ளது என பிரதேச சபையின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .