2025 ஜூலை 14, திங்கட்கிழமை

யுத்தத்தால் சேதமடைந்த பாடசாலைக்கு புதிய கட்டிடம்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 17 , மு.ப. 05:14 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன், கி.பகவான்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நிலையில், தற்காலிக குடிசையில் இயங்கி வந்த வேம்படுகேணி சின்மய மிசன் தமிழ் கலவன் பாடசாலைக்கான இரண்டு மாடிக்கட்டிடத் தொகுதி, ஞாயிற்றுக்கிழமை (16) திறந்து வைக்கப்பட்டுது.

சுவிஸ் அபிவிருத்தி நிறுவனத்தின் 26 மில்லியன் ரூபாய் நிதியுதவியில் வகுப்பறைகள், சமையலறை மற்றும் கழிப்பிட வசதிகளுடன் கூடியதாக இவ்விரு கட்டிடங்களும் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

1999ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தம் காரணமாக, இப்பாடசாலை மூடப்பட்ட நிலையில் வேறு பாடசாலைகளுடன் இணைப்பு பாடசாலையாக இயங்கி வந்தது.

தொடர்ந்து 2004ஆம் ஆண்டு சொந்த இடத்தில் இயங்கிய போது, கட்டிட வசதிகள் அனைத்தும் அழிவடைந்த நிலையில் உடைந்த கட்டிடங்களுக்குள் இயங்கியது. இருப்பினும், யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட இந்த பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் முடங்கி போயிருந்தன.

2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட பின்னர், 2011ஆம் ஆண்டு இந்த பாடசாலை மீண்டும் இயங்க ஆரம்பித்தது.  இருந்தும், வகுப்பறை வசதிகள் இல்லாமையால் தொண்டு நிறுவனமொன்று நிர்மாணித்துக்கொடுத்த தற்காலிக கொட்டகையில் பாடசாலை இயங்கி வந்தது.

இந்நிலையில் இந்த பாடசாலைக்கு நிரந்தர கட்டிடம் அமைப்பதற்கு சுவிஸ் அபிவிருத்தி நிறுவனம் முன்வந்தது. அதற்கமைய கட்டிட பணிகனள் 2014ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டு கடந்த மாதம் கட்டிடப் பணிகள் முடிவுற்ற நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (16) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த பாடசாலையில் தரம் 1 தொடக்கம் 11 வரையான வகுப்புக்கள் இருப்பதுடன், தற்போது 160 மாணவர்கள் கல்விகற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டிடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், கிளிநொச்சி வலயக்கல்வி பணிப்பாளர் க.முருகவேல் ஆகியோர் திறந்து வைத்தனர். 




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .