2025 ஜூலை 14, திங்கட்கிழமை

ஒட்டுசுட்டான் வீட்டில் பணம், நகை கொள்ளை

Kanagaraj   / 2014 நவம்பர் 19 , பி.ப. 01:16 - 0     - {{hitsCtrl.values.hits}}



ரஸீன் ரஸ்மின்


முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கருவேலன்கண்டல் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 20 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 14 பவுண் தங்க நகைகள் என்பன நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் கொள்ளையிடப்பட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டுசுட்டான் கருவேலன்கண்டல் பகுதியைச் சேர்ந்த கொந்தராத்து வேலை செய்யும் லட்சுமிகாந்தன் சந்திரரூபன் என்பவரின் வீட்டிலேயே கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இக்கொள்ளைச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபரின் வீட்டிற்கு நேற்று செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 1 மணியளவில் வந்த நான்கு பேர் வீட்டுரிமையாளரை கடுமையாக தாக்கியுள்ளனர்.
குறித்த நான்கு பேரும் அலவாங்கு, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் உள்ளே வந்தவர்கள் அவரை வெட்டிக் காயப்படுத்தியுள்ளனர்.

இதன்போது வீட்டிலிருந்த மனைவியும், இரு பிள்ளைகளும் வீட்டுக்கு வெளியே சென்று பற்றையொன்றுக்குள் ஒழிந்து கொண்டுள்ளனர்.

கொள்ளையர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்ற வீட்டை விட்டு 0வெளியேறிய கணவர், அவருடைய உறவினரின் வீட்டுக்கு ஓடிச்சென்று நடந்த சம்பவத்தை கூறிவிட்டு மீண்டும் வீட்டை நோக்கி வந்துள்ளார்.

அப்போது கொள்ளையர்கள் பணத்தையும், நகைகளையும் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளார்கள் என அந்த வீட்டு உரிமையாளர் பொலிஸாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நான்கு கொள்ளையர்களும் குறித்த நபரின் வீட்டுக்குள் நுழையும் முன்னர் பின்னால் தங்கியிருந்து தொழில்புரியும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த மூவரையும், வீட்டின் உரிமையாளரின் வீட்டிலுள்ள களஞ்சியசாலை அறையில் தங்கிருந்த தொழிலாளர் ஒருவரையும் கட்டிவைத்து விட்டே  கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளைச்சம்பவம் இடம்பெற்றமை பற்றி ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

ஆத்துடன், கொள்ளையர்களின் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான வீட்டுரிமையாளர் மாஞ்சோலை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இக்கொள்ளைச் சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உப பொலீஸ் பரிசோதகர் பேர்ட்டி உடுகும்புர தலமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .