2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கொள்ளைச் சம்பவம்: பொலிஸ் உப பரிசோதகர் அடையாளம் காணப்பட்டார்

Sudharshini   / 2014 நவம்பர் 20 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு கருவேலன்கண்டல் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை(18) இரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் அடையாளங்காணப்பட்டுள்ளதாக ஒட்டுச்சுட்டான் பொலிஸார் தெரிவித்ததுடன் மேலும் மூவர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கருவேலன்கண்டல் பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 20 இலட்சம் ரூபாய் பணம் மற்றும் 14 பவுன் தங்க நகைகள் என்பன் செவ்வாய்க்கிழமை(18) நள்ளிரவு கொள்ளையிடப்பட்டுள்ளதுடன் வீட்டுரிமையாளர் வெட்டுக்காயங்களுக்கு உள்ளான நிலையில் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார்,  வவுனியாவில் வைத்து பொலிஸ் உப பரிசோதகர்கள் நான்கு பேரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்ததுடன்; அவர்கள் பயணித்ததாகக் கூறப்படும் சொகுசு காரையும் கைப்பற்றியுள்ளனர்.

வவுனியாவிலுள்ள ஹோட்டலொன்றில் வைத்து மேற்படி நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டதோடு அவரை வீட்டுரிமையாளர் அடையாளம் காட்டியுள்ளார்.

இந்நிலையில் மேற்படி நால்வரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .