2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வவுனியா விவசாயிகளுடன் கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 20 , மு.ப. 09:42 - 0     - {{hitsCtrl.values.hits}}



-நவரத்தினம் கபில்நாத்

தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை காரணமாக குளங்களில் ஏற்படும் அனர்த்தங்களை தடுப்பதற்காக வவுனியா மாவட்ட விவசாயிகளுடனான கலந்துரையாடல்  வவுனியாவில் வியாழக்கிழமை (20) நடைபெற்றது.

அனர்த்த முகாமைத்துவ நிலையமும் விவசாய திணைக்களமும் இணைந்து ஏற்பாடுசெய்த இந்தக்; கலந்துரையாடலில், சேதமடைந்துள்ள குளங்களை  புனரமைப்பதன் ஊடாக அனர்த்தங்களை எவ்வாறான வழிமுறைகளில் தடுக்கமுடியும் என்பது தொடர்பில் விவசாயிகளுடன் கலந்துரையாடப்பட்டது.

அணைக்கட்டுகளின் தற்போதைய தன்மைகள் குறித்தும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தால் விவசாயிகளிடமிருந்து எழுத்துமூலமாக பெறப்பட்டிருந்ததுடன், அவற்றை சீர்செய்வது தொடர்பிலும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவிப் பணிப்பாளர் ரி.சூரியராஜாவினால் எடுத்துரைக்கப்பட்டிருந்தது.

இதன்போது அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா மாவட்ட உதவிப்பணிப்பாளர் ரி.சூரியராஜா, கமநல சேவைகள் திணைக்களத்தின் வவுனியா மாவட்ட உதவி ஆணையாளர்  எம்.சுலோஜனா ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .