2025 ஜூலை 14, திங்கட்கிழமை

வவுனியா பிரதேச சபை வரவு –செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்கு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 21 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் 2015ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டம் மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் க.சிவலிங்கம் வெள்ளிக்கிழமை  (21) தெரிவித்தார்.

2015ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தின் ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்திகளை உள்ளடக்கி இப்பாதீடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதனை மக்கள் பார்வைக்காக கூமாங்குளம் நூலகம் மற்றும் ஓமந்தையில் அமைந்துள்ள பிரதேசசபையின் உப அலுவலகம் மற்றும் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனவே வரவு -செலவுத்திட்டத்தை மக்கள் பார்வையிட்டு ஏதேனும் ஆட்சேபனைகள் இருப்பின், 7 நாட்களுக்குள் தமக்கு அறிவிக்குமாறும் கோரியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .