2025 ஜூலை 14, திங்கட்கிழமை

செட்டிகுளம் வைத்தியசாலை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 21 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

கடமையிலிருந்த காவலாளியை வைத்தியர் தாக்கியதாக தெரிவித்து வவுனியா செட்டிகுளம் தள வைத்தியசாலையின் ஊழியர்கள் வெள்ளிக்கிழமை (21) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வைத்தியசாலை முன்றலில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பட்டத்தில் கலந்துகொண்டவர்கள் தெரிவிக்கையில்,

'செட்டிகுளம் தள வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்தியர் நேற்றிரவு கடமையிலிருந்த காவலாளியை அழைத்து, நோயாளர் காவுவண்டியை தள்ளுமாறு பணித்ததாகவும் அதேவேளை, மற்றுமொரு காவலாளியையும் அழைக்குமாறு வைத்தியர் தெரிவித்தபோது காவலாளி அவர் வாயில் கடமையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக கோபமடைந்த வைத்தியர் காவலாளி வைத்திருந்த மின்விளக்கை பறித்து, காவலாளியின் தலையில் தாக்கியதாகவும் இதன் காரணமாக காவலாளிக்கு காயமேற்பட்டுள்ளதாகவும்' கூறினர்.

சிற்றூழியர்களின் சீருடைகளையும் நீர்த்தொட்டியில்; போட்டுள்ளதால் தமக்கு கடமையை செய்ய சீருடை இல்லாதுள்ளதாகவும் தெரிவித்தனர்.
இதேவேளை, சம்பந்தப்பட்ட வைத்தியர் கடந்த தடவை தாதியர் ஒருவரை தாக்கியதாகவும் தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள், வைத்தியர் மதுபோதையில் உள்ளமையினாலேயே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.

இந்நிலையில் வைத்தியசாலையின் தாதியர்கள், மருத்துவ மாதுக்கள், சிற்றூழியர்கள் வைத்தியசாலையின் முன்னால் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

வைத்தியரை இடமாற்றம் செய்யவேண்டும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்ததுடன், அதிகாரிகளுக்கும் இச்சம்பவம் தொடர்பில் அறிவித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளர்கள் சிகிச்சை பெறமுடியாத நிலை காணப்பட்டிருந்தது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .