2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அரசியல் என்பது சமூகப் பொறுப்பு வாய்ந்த ஒரு பணியாகும் : அஸ்மின்

Sudharshini   / 2014 நவம்பர் 23 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொறோசேரியன் லெம்பேட்

அரசியல் என்பது சமூகப் பொறுப்பு வாய்ந்த ஒரு பணியாகும். ஆனால், அது இன்று வியாபாரமாக்கப்பட்டிருக்கின்றது. இதன் காராணத்தினால் தான், மக்களுக்காக மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளின் பின்னணியில் அரசியல் ஊறிப்போயிருக்கின்றது என வடமாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின் தெரிவித்தார்.

மன்னார், நானாட்டான், மாந்தை மேற்கு, முசலி ஆகிய பிரதேசச் செயலாளர்கள் பிரிவுகளிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட 27 கால்நடை பண்ணையாளர்களில், ஒருவருக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் மொத்தமாக இரண்டு இலட்சத்து எழுபதாயிரம் ரூபாய் செலவில், கோழிக் குஞ்சுகள், ஆடுகள், கோழிக்கூடுகள் அமைப்பதற்கான உபகரணங்கள் மற்றும் சீமெந்து ஆகியன நேற்று சனிக்கிழமை (22) உயிலங்குளம் கால்நடை அபிவிருத்தி திணைக்களத்தின் துணைப் பணிப்பாளர் டாக்டர் கேதீஸ்வரி தலைமையில் வழங்கிவைக்கப்பட்டன. இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,

இன்றைய நிகழ்வின் பயனாளிகள் அனைவரும் அரசியல் பின்னணியோடு தெரிவு செய்யப்பட்டவில்லை. மத ரீதியில் அல்லது இனத்துவ ரீதியில் தெரிவு செய்யப்படவில்லை. மாறாக தேவையுடையவர்கள் என்ற அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்பட்டு அதன் அடிப்படையில் பொருத்தமான பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இத்தகைய முன்மாதிரியினை நாம் எல்லா இடங்களிலும் பின்பற்றுவோம். இதன் மூலம் நாம் எவ்வித அரசியல் நோக்கத்தினையும் முன்வைக்கவில்லை. இத்தகைய உதவித்திட்டங்களின் மூலம் பயனாளிகளாகிய நீங்கள் உச்சப்பயனை அடையவேண்டும் என்பதுவே எமது எதிர்பார்ப்பாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .