2025 ஜூலை 14, திங்கட்கிழமை

கிளிநொச்சியில் மலசலகூடங்களும் கிணறுகளும் அமைப்பு

Suganthini Ratnam   / 2014 நவம்பர் 24 , மு.ப. 04:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுப்பிரமணியம் பாஸ்கரன்

மீள்குடியேற்ற அமைச்சின் 16.55 மில்லியன் ரூபாய் நிதியுதவியில், கிளிநொச்சி மாவட்டத்தில் 295 மலசலகூடங்களும் 10 பொதுக்கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பிரிவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மலசலகூடங்கள், கிணறுகள் அமைப்பதற்கான நிதி, கடந்த ஏப்ரல் மாதம் மீள்குடியேற்ற அமைச்சால் கிளிநொச்சி மாவட்ட செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து  கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் மலசலகூடங்கள் அமைப்பதற்கான பயனாளிகள் தெரிவும் பொதுக்கிணறுகள் அமைப்பதற்கான இடங்கள் தெரிவும் இடம்பெற்றன.

இவற்றுக்கான  வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு, தற்போது 295 மலசலகூடங்களும் 10 பொதுக்கிணறுகளும்; அமைக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த 2013ஆம் ஆண்டும் மீள்குடியேற்ற அமைச்சின் 14.8 மில்லியன் ரூபாய் நிதியில், கிளிநொச்சி மாவட்டத்தில் 200 மலசலகூடங்களும் 10 பொதுக்கிணறுகளும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .