2025 ஜூலை 14, திங்கட்கிழமை

குழந்தையை கொலைச்செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை

Sudharshini   / 2014 நவம்பர் 26 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மடு உதவி அரசாங்க அதிபர் பிரிவுக்குட்பட்ட தச்சனா மருதமடு கிராமத்தில் தனது குழந்தையை கொலை செய்த தந்தை தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்.

-இச்சம் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது.

இருவரும் பெரிய பண்டிவிரிச்சான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.எனினும் குழந்தை உயிரிழந்து விட்டது.

-மேலதிக சிகிச்சைக்காக குழந்தையின் தந்தையான சுஜேந்திரன் (வயது-28) என்பவர் மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சைக்கு உற்படுத்தப்பட்டுள்ளார்.

உயிரிழந்த ஆண் குழந்தை ஒன்றரை வயதுடைய சுஜேந்திரன் தரனி என தெரியவந்துள்ளது. குழந்தையின் சடலம் தற்போது மன்னார் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. சடலத்தை பார்வையிட்ட மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தை சட்ட வைத்திய பரிசோதனைக்கு உற்படுத்துமாறு உத்தரவிட்டார்.

குறித்த நபரின் மனைவி இரு  மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிய வருகின்றது.

இச்சம்பவம் குறித்து மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .