2025 ஜூலை 14, திங்கட்கிழமை

அனுமதி பெற்றும் விளம்பர பலகை அகற்றப்பட்டமை குறித்து வர்த்தகர்கள் விசனம்

Gavitha   / 2014 நவம்பர் 29 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியாவில் வர்த்தக நிலையங்களில் காட்சிப்படுத்தப்பட்ட பெயர்ப்பலகைகளுக்கு நகரசபையிடம் அனுமதி பெற்று காட்சிப்படுத்தப்பட்ட போதிலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் வெள்ளிக்கிழமை (28) அகற்றப்பட்டதாக வர்த்தகர்கள் விசனம் தெரிவித்தனர்.

வவுனியா, குருமன்காடு, மன்னார் வீதி பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களின் முன்னால் இருந்த குறித்த வர்த்தக நிலையங்களின் விளம்பர பலகைகள் வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் கழற்றிச் செல்லப்பட்டுள்ளன.

வீதி அபிவிருத்தி அதிகாரசபை குறித்த விளம்பர பலகைகளை தமது நிலத்துக்குள் வைப்பதற்கு தம்மிடம் பணம் செலுத்தி அனுமதி பெறவில்லை என்று கூறியே அவற்றை கழற்றிச் சென்றது.

ஆனால், குறித்த விளம்பர பலகைகளை பதிப்பதற்கு நகரசபை தமது பகுதி என கூறி வர்த்தக நிலையங்களில் தொடர்ந்து பல வருடங்களாக பணம் அறவிட்டு வந்ததுடன், இப்போதும் அறவிட்டு வருகிறது. இது வரை காலமும் அப் பகுதி வர்த்தக நிலையங்களுக்கு வந்து இது தொடர்பில் தெரியப்படுத்தாது, எந்த விதமான முன்னறிவித்தலும் இன்றி, நகரசபைக்கு பணம் கட்டுவதில்லை. தமக்குத் தான் கட்ட வேண்டும் என கூறி வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் விளம்பர பலகைகளை கழற்றிச் சென்றுள்ளனர்.

விளம்பர பலகைகளுக்கும் அதனை நிறுவதற்கும் நகரசபையின் அனுமதி பெறுவதற்கும் தாம் பெருந்தொகையான பணத்தை செலவிட்டுள்ள நிலையில் எந்தவிதமான முன்னறிவித்தலும் தம்மிடம் வழங்கப்படாமல் விளம்பர பலகைகளை கழற்றி சென்றுள்ளார்கள் என வர்த்தகர்கள் கூறுகின்றனர். வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிலத்துக்கு ஏன் நகரசபை பணம் பெற்றது எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (28) வவுனியா பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சிவில் பாதுக்காப்பு குழு கூட்டத்தின் போது, நகர வரியிறுப்பாளர் சங்கத்தினர் பிரதேச செயலாளரின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தனர். இதையடுத்து, இது தொடர்பில் உடனடியாக கவனம் செலுத்துமாறு வவுனியா நகரசபைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .