2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பாதை புனரமைப்பு

Sudharshini   / 2014 நவம்பர் 29 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைத்துறைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட, முல்லைத்தீவு பொது நூலகத்துக்கு செல்லும் உள்வீதி, தார்பாதையாக புனரமைக்கப்படவுள்ளதாக கரைத்துறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சு.ரவீந்திரநாதன் நேற்று வெள்ளிக்கிழமை  (28) தெரிவித்தார்.

எமது சபையின் பொதுநூலகம், முஸ்லிம் பாடசாலை, பதிவாளர் அலுவலகம் என்பன இவ்வீதியினூடாகவே அமைந்துள்ளன. மிக நீண்ட காலமாக குறித்த வீதியானது குன்றும் குழியுமாக காட்சியத்து வருகின்றது.

எனவே, மக்கள் தமது தேவைகளை நிறைவேற்றுவதற்கு இவ்வீதியூடாகவே பயணத்தை மேற்கொள்கின்றனர்.

ஆகவேதான், மக்களின் சிரமங்களை கவனத்தில் கொண்ட எமது சபை இவ்வீதியை புனரமைக்க சுமார் 3மில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளதாகவும் வீதிப்புனரமைபுப் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.
 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .