2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மன்னாரில் செவ்வாயன்று கடையடைப்புக்கு அழைப்பு

Kanagaraj   / 2014 நவம்பர் 30 , மு.ப. 05:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் நகரில் உள்ள வர்த்தக நிலையங்களை எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மூடி எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக மன்னார் நகர வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிவித்தல் கடிதம் சகல வர்த்தக நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன

எதிர்வரும் பண்டிகைக்கால வியாபாரத்துக்காக மன்னார் நகர சபையால் மன்னாரில் வழங்கப்படவுள்ள தற்காலிக கடைகளுக்கான அனுமதியை நிறுத்துமாறு மன்னார் நகர சபை தலைவர்,செயலாளர்களுக்கு மன்னார் நகர வர்த்தக சங்கத்தினால்  அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அறிவித்தல்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை.இந்த நிலையில் கடந்த 28 ஆம் திகதி மன்னார் நகர வர்த்தக சங்க நிர்வாகம் மேற்படி விடயம் தொடர்பில்  கலந்துரையாடியது.

இதற்கமைவாக எதிர்வரும் 2 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடி முழு அளவிலான கடை அடைப்பை மேற்கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக மன்னார் நகர வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .