2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக ஊர்வலம்

Gavitha   / 2014 நவம்பர் 30 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக வவுனியா, சிதம்பரபுரம் பெண்கள் வள நிலையத்தின் ஏற்பாட்டில், ஊர்வலம் ஒன்று வவுனியா நகரில் சனிக்கிழமை (29) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக பெண்கள் வள நிலையமானது 16 நாள் செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு அங்கமாக, வவுனியா நகரில் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான ஊர்வலம் வவுனியா நகரில் பிரதான வீதி வழியாக வந்து நகரசபை வளாகத்தை சென்றடைந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள், பெண்கள் மீதான வன்முறையை ஒழிப்போம், வன்முறைகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவோம், பெண்கள் நாட்டின் கண்கள், பெண்களை தாயாய், சகோதரியாய் நினையுங்கள் போன்ற கோஷங்களை எழுப்பியதுடன், பதாதைகளையும் தாங்கியிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .