2025 ஜூலை 14, திங்கட்கிழமை

நலன்புரி நிலையங்களை மூடுமாறு பிரதேச செயலாளர் பணிப்பது தவறு: ஆனந்தன் எம்.பி

Thipaan   / 2014 நவம்பர் 30 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


கடும் மழை பொழியும் நிலையில் மக்கள் நலன்புரி நிலையத்தில் இல்லை என தெரிவித்து நலன்புரி நிலையத்தை பிரதேச செயலாளர் மூடுமாறு பணித்தமை தவறான செயல் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சனிக்கிழமை (29) தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களை, அவர்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,
வவுனியாவில் 5 நலன்புரி நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வவுனியா பிரதேச செயலகப்பிரிவில் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் நலன்புரி நிலையங்களிலும் மிகவும் இன்னல்களை அனுபவிக்கின்றனர்.

இதனை நான் நேரில் பார்வையிட்டதன் அடிப்படையிலும் மக்கள் என்னிடம் முன்வைத்த முறைப்பாட்டின் படியும் பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் இடம்பெயர்ந்த மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை.

நலன்புரி நிலையங்களில் போதுமான வசதிகள் இன்மையால் இடம்பெயாந்த மக்கள் இரவிரவாக நுளம்புக்கடிக்கு மத்தியில் நித்திரையின்றியும் போதிய உணவின்றியும் இருந்து விட்டு, காலையில் காலைக்கடனை முடிப்பதற்காக வீடுகளுக்கு சென்ற சமயம் நலன்புரி நிலையங்களுக்கு சென்ற வவுனியா உதவி பிரதேச செயலாளர் அம் மக்களை அச்சுறுத்தும் தொனியில் பேசியுள்ளதுடன் மக்கள் உணவுக்காக இடம்பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்ததாகவும் மக்கள் தற்போது நலன்புரி நிலையங்கிளல் இல்லை எனவும் தெரிவித்துள்ளார் என மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளனர்.

இவருடைய அறிக்கையின் காரணமாக தற்போதும் வவுனியாவில் மழை பெய்து வரும் நிலையில் மக்கள் தங்கியுள்ள நலன்புரி நிலையங்களை மூடுமாறு பிரதேச செயலளார் பணித்துள்ளார்.

இம் மக்கள் சுய முயற்சியில் வாழும் மக்கள் இவர்கள் உணவுக்கு கையேந்தும் மக்கள் அல்ல. வந்தாரை இன்முகத்தோடு வரவேற்று தமக்கில்லையேனும் உணவளிக்கும் மக்கள். எனவே அதிகாரிகள் மக்களின் இன்னல்களுக்கு ஆவன செய்வதை விடுத்து அவர்களை இழிவாக கருதுவது வேதனையான விடயமாகும்.

இதேபோலவே இடம்பெயர்ந்த மக்களுக்காக சிகிச்சை அளிக்க வந்த மருத்துவரும் மக்களுக்கு அதட்டும் தொனியில் பேசியுள்ளார்.
அத்துடுன் நடமாடும் சேவை இடம்பெற்ற தினத்தில் வருத்தம் ஏற்பட்டவர்கள் மாத்திரம் சிகிச்சை பெற வருமாறும் கூறியுள்ளார்.

எனவே மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இன்னலுறும் மக்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் பணியாற்றுமு; அதிகாரிகள் சேவையாற்ற வேண்டும் என்பதனை மீண்டும் மீண்டும் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.

எனவே நலன்புரி நிலையங்களில் உள்ள மக்களுக்கு தேவையான நிவாரணங்களை அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினர் வழங்க ஆவண செய்ய வேண்டும் என்பதுடன் இது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சரும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, 844 குடும்பங்களை சேர்;த 2,865 பேர் வவுனியா மாவட்டத்தில் மழையின் காரணமாக பாதிப்படைந்துள்ளதுடன் 17 வீடுகள் முற்றாக சேதமடைந்தும் 617 வீடுகள் பகுதியளவில் பாதிப்படைந்தும் உள்ளது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .