2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மூவின மக்களின் நன்மையை முன்நிறுத்தியே முடிவெடுப்போம்: ரிஷாட்

Gavitha   / 2014 நவம்பர் 30 , பி.ப. 01:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரஸீன் ரஸ்மின்


நாடு பூராகவுமுள்ள மூவின மக்களின் நிம்மதியான வாழ்வு, கௌரவமான இருப்பு, சுபீட்சமான பொருளாதார முன்னேற்றம் என்பனவற்றை முன்நிறுத்தியே நானும் எமது கட்சியும் தேர்தல் தொடர்பிலான முடிவை எடுக்கும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மக்களின் கருத்தை அறியும் கலந்துரையாடலொன்று வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சனிக்கிழமை (29)இடம்பெற்றது.

இங்கு கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து நானும் எனது கட்சியும் எடுக்கும் முடிவு, வன்னி மாவட்டத்தில் வாழும் ஒவ்வொருவரினதும் சுபீட்சமான எதிர்காலத்துக்கான தீர்மானமாகவே அமையும்.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் வேளையில், தேசிய ரீதியாக உள்ள கட்சிப் போராளிகளின் கருத்தறியும் முதல் கூட்டமே இதுவாகும். நான் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவும் நாடு பூராகவும் உள்ள எமது கட்சிப் போராளிகளுக்கும் கட்சியி;ன் அபிமானிகளுக்கும் நன்மை பயப்பதாகவே அமையும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .