2025 ஜூலை 14, திங்கட்கிழமை

பண்டிகைக்கால தெருவோர வியாபாரத்தை தடை செய்யக்கோரி மன்னார் வர்த்தகர்கள் கண்டனப்பேரணி

Menaka Mookandi   / 2014 டிசெம்பர் 03 , மு.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்

பண்டிகைக்கால தெருவோர வியாபாரத்தை தடை செய்யக்கோரி, மன்னார் நகரசபைக்கு எதிரான கண்டனப்பேரணி ஒன்றை மன்னார் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நேற்று  செவ்வாய்க்கிழமை (03) காலை வர்த்தகர்கள் மேற்கொண்டிருந்தனர்.

மன்னார் பஸார் பகுதியில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்ட நிலையில் மன்னார் பஸார் பகுதியில் ஒன்று கூடிய நூற்றுக்கனக்கான வர்த்தகர்கள் குறித்த கண்டனப் பேரணியில் ஈடுபட்டனர்.

மன்னார் நகரில் எதிர்வரும் பண்டிகைக்கால வியாபாரம் தொடர்பில் நகரசபையால் வழங்கப்படவுள்ள கடைகளை நிறுத்துமாறு மன்னார் நகரசபை தலைவர், செயலாளர்களுக்கு மன்னார் நகர வர்த்தக சங்கத்தினால் அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அறிவித்தல்களுக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை. இந்த நிலையில் கடந்த 28ஆம் திகதி மன்னார் நகர வர்த்தக சங்க நிர்வாகம் கூடி கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளது.

இதற்கமைவாக இன்று செவ்வாய்க்கிழமை வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடி முழு அளவிலான கடையடைப்பை மேற்கொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தவுள்ளதாக மன்னார் நகர வர்த்தக சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைவாக குறித்த கண்டனப்பேரணி இன்று மன்னார் பஸார் பகுதியில் மேற்கொள்ளப்பட்டது.

வர்த்தக நிலையங்களை மூடிய வர்த்தகர்கள் காலை 10 மணயிளவில் மன்னார் பஸார் பகுதியில் ஒன்று ஒன்று கூடினர். பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மன்னார் நகர சபை நோக்கி ஊர்வலமாக சென்றனர். பின்னர், தமது கோரிக்கை அடங்கிய மகஜரை வர்த்தக சங்கத்தின் சார்பாக மன்னார் நகரசபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசத்திடம் கையளிக்கப்பட்டது.

மகஜரை பெற்றுக்கொண்ட நகர சபையின் தலைவர் இவ்விடையம் தொடர்பில் மக்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள் ஆகியோரின் கருத்துக்களை பெற்று சில தினங்களில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என தெரிவித்தார்.

இதன் போது மன்னார் நகர சபையின் உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ், நகர சபை உறுப்பினர் இ.குமரேஸ் ஆகியோறும் வர்த்தகர்களுடன் கலந்துரையாடினார்.

மன்னார் பஸார் பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டமையினால் தூர இடங்களில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்ய வருகை தந்த மக்கள் பல்வேறு அசௌகரியங்களக்கு முகம் கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .