2025 ஜூலை 14, திங்கட்கிழமை

மோட்டார் சைக்கிள் தீ பற்றி எரிந்ததில் இருவர் காயம்

Gavitha   / 2014 டிசெம்பர் 03 , பி.ப. 02:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


வவுனியா நகரப் பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் நிரப்பிகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வெடித்து தீப்பற்றி எரிந்ததில் இருவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

வவுனியா நகரில் உள்ள பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்துக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தீப்பற்றிய எரிவதை அவதானித்த அயலவர்கள் தீயணைப்பு சேவை பிரிவுக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் விரைந்து செயற்பட்ட  எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் எரிந்து நாசமாகியுள்ளதுடன், அதன் சாரதியும் பெற்றோல் நிரப்பிய ஊழியரும் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .