2025 ஜூலை 09, புதன்கிழமை

காணிப் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 09:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலகத்;தில் பன்னங்கண்டி மருதநகர் கிராம மக்களின் காணிப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல் வியாழக்கிழமை (23) நடைபெற்றது.

கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழுள்ள பன்னங்கண்டிப் பகுதியில் தனியாருக்கு சொந்த நெல் காணிகளில் சுமார் 280 குடும்பங்களும் மருதநகர் பகுதியில் நீர்ப்பாசனத் திணைக்களத்;துக்குச் சொந்தமான காணிகளில் சுமார் 100 குடும்பங்களும் குடியேறி கடந்த 5 ஆண்டுகளாக வீட்டுத்திட்டம் உள்ளிட்ட எதுவித அடிப்;படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களுக்கான அடிப்படை வசதிகளை வழங்குவதற்கு அவர்களுக்;கு சொந்த காணிகள் இல்லாத நிலை ஓர் காரணமாக தெரிவிக்கப்படுகின்றது. இதனைக் கருத்திற்கொண்டு இந்த கலந்துரையாடல் ஒழுங்கு செய்யப்பட்டது.

மாகாண மேலதிக காணி ஆணையாளர் அலுவலகத்தின் உதவிப்பணிப்பாளர் ஆர்.மகேஸ்வரன் வனவள திணைக்கள அதிகாரிகள், கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன் யு.என்.எச்.சீ.ஆர் பிரதிநிதிகள், மேற்படி கிராமங்களின் கிராமஅலுவலர்கள் கிராமமட்ட அமைப்புக்கள், இலங்கை சட்ட உதவி ஆணைக்;;குழுவின் பிரதிநிதிகள் எனப்பலர் கலந்துகொண்டனர்.

தனியார் காணிகளில் மிக  நீண்டகாலமாக வாழந்;து வருபவர்களுக்கு அந்த காணிகளின் உரிமைகளை பெற்றுக்கொடுப்பது அல்லது மாற்;று இடங்களில் குடியமர்த்துவது போன்ற விடயங்கள் பற்றியும் ஏற்கெனவே மருதநகர் பகுதி மக்களை மாற்றிடத்தில் குடியமர்த்தும் பொருட்டு கோணாவில் பகுதியில் காடுகளை வெட்டியபோது வனவள திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தமையால் தற்போதுள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .