Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 மே 03 , பி.ப. 12:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
இலங்கை போக்குவரத்து சபையின் செயற்பாடுகளை கண்டித்து தனியார் பஸ் உரிமையாளர்கள், எதிர்வரும் 11ஆம் திகதி பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக வவுனியா மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் ஏ. டபிள்யூ. ரசீன், ஞாயிற்றுக்கிழமை (03) தெரிவித்தார்.
வவுனியா, தனியார் பஸ் உரிமையார் சங்கத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வவுனியா மாவட்டத்தில் தனியார் பஸ்களுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்குமென முரண்பாடு ஏற்படாத வகையில் நேரசூசி வழங்கப்பட்டிருந்தது.
ஆனால், தற்போது அதிகளவான பஸ்கள் இலங்கை போக்குவரத்து சபைக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் நேரசூசியை அலட்சியம் செய்து போக்குவரத்து சேவையை முன்னெடுப்பதுடன் ஏனைய மாகாணங்களிலிருந்து வரும் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை வவுனியா சாலையில் தரித்து பயணிகளை ஏற்ற அனுமதிக்கின்றனர்.
இதன் காரணமாக தனியார் பஸ்கள் நஷ்டத்தை எதிர்கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பில் வவுனியா அரசாங்க அதிபர், தேசிய போக்குவரத்து அணைக்குழு உட்பட மத்திய மற்றும் மாகாண போக்குவரத்து அமைச்சர்களுக்கும் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும், இதுவரை சாதகமான பதில் கிடைக்கவில்லை.
எனவே, வவுனியாவில் அமைக்கப்படும் புதிய பஸ் நிலையத்திலிருந்து தனியார் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவேண்டும் என்பதனையும் வலியுறுத்தி எதிர்வரும் 11ஆம் திகதி பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளோம்.
எமது தீர்மான திகதிக்கு முன்னர் தீர்வு கிடைக்காத பட்சத்தில் தொடர்ச்சியான பணி பகிஸ்கரிப்பில் ஈடுபடவும் தீர்மானித்துள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
56 minute ago