2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

முல்லைத்தீவு சந்தைக்கு மீன்கள் கொண்டுவரப்பட வேண்டுமென கோரிக்கை

George   / 2015 மே 06 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கடலில் பிடிக்கப்படும் மீன்களை கடற்கரையில் விற்பனை செய்யாது முல்லைத்தீவு நகர சந்தையில் விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டுமென முல்லைத்தீவு நகர அபிவிருத்திக் குழு, முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரனிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

முல்லைத்தீவு கடற்றொழிலாளர்களினால் பிடிக்கப்படும் மீன்கள் கடற்கரையிலேயே விற்பனை செய்யப்படுகின்றது. மீள் குடியேற்றத்தின் பின்னர் இந்நிலைமை கூடுதலாகக் காணப்படுகின்றது.

இதன் காரணமாக நகர வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், பிரதேச சபைக்கு கிடைக்கவேண்டிய வருமானம் கிடைக்காமல் போகின்றது. முல்லைத்தீவு சந்தையில் நல்ல மீன்கள் இல்லாமையால், மக்கள் நல்ல மீன்களைப் பெறமுடியாதுள்ளது. இதனால் முல்லைத்தீவுச் சந்தைக்கு வருகை தரும் மக்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைந்துள்ளது.

அனைத்து மீன்களையும் முல்லைத்தீவு சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் முல்லைத்தீவு நகரத்தின் வளர்ச்சி கூடுமெனவும் நகர அபிவிருத்திக் குழு தனது வேண்டுகோளில் குறிப்பிட்டுள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .