2025 ஜூலை 09, புதன்கிழமை

'தடைசெய்யப்பட்ட வலைகள் பயன்படுத்துவோரை பிடிக்க அதிகாரம் வேண்டும்'

Thipaan   / 2015 மே 09 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு, நந்திக்கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி மீன்படித்தொழிலில் ஈடுபடுபவர்களை பொலிஸாரின் உதவியுடன் பிடிக்க, மீன்பிடிச் சங்கத்தினருக்கு அதிகாரங்களை வழங்க வேண்டும் என ஹிஜ்ராபுரம் மீன்பிடிச் சங்கத் தலைவர் முத்து முஹம்மது ஜாபிர் இன்று சனிக்கிழமை (09) தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபருக்கும் மீன்பிடிச் சங்கத்தினருக்கும் இடையில் எதிர்வரும் 11ஆம் திகதி விஷேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

அந்த சந்திப்பில் மேற்குறித்த கேரிக்கையை விடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
முல்லைத்தீவு நந்திக்கடலில் தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி இறால் மற்றும் மீன்கள் பிடிக்கப்படுகிறன.

இது நந்திக்கடலில் தொழில் செய்யும் மீனவர்களுக்கு பொருளாதார ரீதியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திள்ளது.

இவ்வாறு தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி தொழில் செய்யும் மீனவர்கள் பலர், கடற்தொழில் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.

எனவே, தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துபவர்களை பிடிப்பதற்குரிய அதிகாரங்களை தெரிவு செய்யப்பட்ட மீனவ சங்கங்களுக்கு வழங்கப்பட்டால், பொலிஸாரின் உதவியுடன் எந்த நேரமும் கண்காணித்து தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .