Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 15 , மு.ப. 07:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
நாட்டில் கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக சுமார் 90,000 பெண்கள் விதவைகள் ஆகியுள்ளனர் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.
மகளிர் விவகார அமைச்சின் ஏற்பாட்டில் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு, கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (14) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துரை வழங்குகையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறினார்.
'யுத்தம் காரணமாக விதவைகள் மட்டுமல்ல 7,000க்கு அதிகமான பெற்றோரை இழந்த சிறுவர்களும் பல்லாயிரக்கணக்கான மாற்றுவலுவுள்ளோரும் உருவாகியுள்ளனர். இவர்களுக்கான வாழ்வாதாரங்கள் மேம்படுத்தப்படவேண்டும். பெண்களை தலைமையாக கொண்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்' என அவர் மேலும் தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட மேலதிக செயலாளர் சி.சத்தியசீலன் உட்பட பெண்கள் பலர் இதில் கலந்துகொண்டார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago