Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2015 ஜூன் 15 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
- நடராசா கிருஸ்ணகுமார்
'அபிவிருத்தி அடைந்த நாடுகளில் பிள்ளைகளுக்கு கிடைக்கும் பாதுகாப்பை எமது பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொடுப்போம்' என்ற தொனிப்பொருளில் உலக புகையிலை ஒழிப்புத் தின விழிப்புணர்வு பேரணி கிளிநொச்சியில் திங்கட்கிழமை (15) நடைபெற்றது.
கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட விழிப்புணர்வு பேரணி கிளிநொச்சி மத்திய கல்லூரியில் நிறைவுபெற்றது. தொடர்ந்து புகையிலை பாவனைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி பிராந்திய பிரதி சுகாதார சேவைகள் அலுவலகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பேரணியில் கலந்துகொண்டவர்கள், உலகில் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் வாழும் பிள்ளைகள் பெற்றுக்கொள்ளும் பாதுகாப்பை எமது பிள்ளைகளுக்கும் பெற்றுக்கொடுப்போம், புகையிலை கம்பனிகளால் மறைக்கப்படும் உண்மைகளை வெளிக்கொண்டு வருவோம்.
நாளொன்றுக்கு 60 இலங்கையர்களை கொலை செய்வதுடன் (வருடத்துக்கு 20 ஆயிரம் பேர்) அதற்கு பதிலாக 80 சிறுவர்களையாவது புதிதாக பழக்க முற்படும் சிகரட் கம்பனிகளின் பிடியிலிருந்து சிறுவர்களை பாதுகாப்போம், கம்பனியை பணக்காரர்களாக்கும் பயனில்லாத சிகரட் பாவனையில் இருந்து விடுபடுவோம், சிகரட் விற்பனையை தவிர்த்து தேசப்பற்றோடு செயற்படும் வியாபாரிகளை ஊக்குவிப்போம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு இந்தப் பேரணியாக சென்றனர்.
கிளிநொச்சி மாவட்ட தொற்றா நோய் பிரிவு பொறுப்பு மருத்துவ அதிகாரி மருத்துவர் சானிக்க பெர்ணான்டோ, கிளிநொச்சி உளநல மருத்துவ அதிகாரி மருத்துவர் எல்.ஜெயராசா, மலோரியா தடுப்பு பிரிவினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago