Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2015 ஜூன் 15 , மு.ப. 10:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் மற்றும் ஸ்கந்தபுரம் ஆகிய இரண்டு கிராமங்களுக்கிடைப்பட்ட பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வு தொடர்ந்த வண்ணமுள்ளதாக அக்கராயன் குளத்தின் கீழான பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவித்தனர்.
அக்கராயன் பாலங்குளத்தின் வயல் நிலப்பகுதியிலும் ஸ்கந்தபுரத்தின் மணியங்குளத்தின் அலைகரைப் பகுதியிலும் இரவு வேளைகளில் சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்ளப்பட்டு வெளியிடங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றது.
சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக இக்குளத்தின் கீழ் எதிர்காலத்தில் நெற்செய்கை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன், அக்கராயன் மேற்கின் இம்மாஸ்நகர், 50 வீட்டுத்திட்டம், மணியங்குளம், விநாயகர் குடியிருப்பு மற்றும் முல்லைத்தீவு துணுக்காயின் ஆரோக்கியபுரம் ஆகிய கிராமங்களின் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், எதிர்காலத்தில் இக்கிராம மக்கள் பெரும் குடிநீர் நெருக்கடியினை எதிர்கொள்ளவுள்ளனர்.
ஆரோக்கியபுரம் கிராமத்திலிருந்து மணியங்குளம் நோக்கி செல்லும் வீதியொன்றினை இல்லாதொழித்தே இந்த மணல் அகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் நடைபெறும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் தொடர்பான விபரங்களை சேகரிக்குமாறு கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், இவ்வாறு மணல் அகழ்வு தொடர்ந்து கொண்டிருப்பதாக செய்கையாளர்கள் கூறினர்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago