Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜூன் 15 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, கள்ளப்பாடு கிராமத்தில் அமைந்துள்ள மயானத்தைச் சுற்றி மதில் அமைப்பதற்கு வடமாகாண சபை உறுப்பினர் சி.சிவமோகன், 5 இலட்சம் ரூபாய் நிதி வழங்கியதையடுத்து மயானம் அமைப்பதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன
நீண்டகாலமாக கள்ளப்பாடு இந்து மயானத்தில், எவ்வித மறைப்புக்களும் அற்ற இடத்தில் வீதி ஓரத்தில் இறந்தவர்களின் உடல்கள் எரியூட்டப்பட்டு வந்தது.
மேற்படி விடயம் ஒரு சமூக பிரச்சனையாகவும், உளவியல் பிரச்சனையாகவும் காணப்பட்டது.
மயானத்துக்கு மதில் அமைப்பதற்கு உதவி செய்யுமாறு அப்பகுதி பொதுமக்கள் கேட்டுக்கொண்டதுக்கிணங்க 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி செய்து மதில் கட்டும் பணியை சிவமோகன் ஆரம்பித்து வைத்தார்.
இதற்கான அடிக்கல் நாட்டுவிழா, ஞாயிற்றுக்கிழமை(14) நடைபெற்றது. கள்ளப்பாடு கிராம மாதர்சங்க, கடல் தொழிலாளர் சங்க, கிராம அபிவிருத்தி சங்க, வன்னி குறோஸ் சுகாதார நிறுவன உறுப்பினர்கள் இந்த அடிக்கல் நாட்டுவிழாவில் கலந்துகொண்டனர்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago