Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 17 , மு.ப. 07:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் 5 வயதுக்கு குறைந்;த சிறுவர்;களை உரிய பாதுகாப்புக்களின்றி பாதுகாவலர்களிடம் ஒப்படைத்துவிட்டு தாய், தந்தையர் தொழில் வாய்ப்புக்களுக்காக மத்;திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்ற நிலை அதிகரித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரியொருவர் புதன்கிழமை (17) தெரிவித்தார்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் பின்தங்கிய கிராமங்களின் குறிப்பிட்ட சில இளவயதுடைய பெண்கள் தொழில் வாய்ப்பு தேடி மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்கின்றனர்.
இவ்வாறு செல்லும் பெண்கள் தமது 5 வயதுக்குக்கு குறைந்த குழந்தைகளையும் 18 வயதுக்கு குறைந்த பெண் பிள்ளைகளையும் பிறரின் பாதுகாப்பிலும் உறவினர்;களின் பாதுகாப்பிலும் பொறுப்பற்ற விதத்தில் விட்டு தொழில் தேடிச்செல்கின்றனர். இதனால் இவ்வாறான பிள்ளைகளின் உரிமைகள் பறிக்கப்பட்டு உரிய பாதுகாப்பற்ற நிலை காணப்படுகின்றது என அவர் கூறினார்.
கிளிநொச்;சி, கோரக்கன்கட்டு பகுதியில் கடந்த மாதம் கிணறு ஒன்றில் இருந்து சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்டார். குறித்த சிறுமியை உறவினர்களின் பாதுகாப்பில் விட்டுவிட்டு, அச்சிறுமியின் தாயார், மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சென்றிருந்த நிலையிலேயே இந்த மரணம் சம்பவித்துள்ளது.
அதேவேளை, இரண்டு சிறுமிகளின் தாயொருவர், மத்திய கிழக்கு நாடொன்றுக்கு வேலைவாய்ப்புக்காக சென்றிருந்த நிலையில், அவ்விரு சிறுமிகளும் அவர்களது தந்தையால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்களும் இம்மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு சிறுவர்களுக்கு உரிய பாதுகாப்பு இன்மையால், அவர்களது எதிர்காலம் கருத்திற்கொள்ளப்படாது உள்ளது. சிறுவர்களது கல்வி, போசாக்கு, சுகாதாரம் போன்ற உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றதாகவும் அந்த அதிகாரி கூறினார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago