Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2015 ஜூன் 17 , மு.ப. 07:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் உபதவிசாளர் தன்னை அச்சுறுத்தியதாக தொண்டமான்நகர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர், புதன்கிழமை (17) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
கரைச்சி பிரதேச சபைக்கு சொந்தமான தொண்டமான் நகர் குடியிருப்பு வீதிகள் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் சேதமடைந்து காணப்படுகின்றன.
இந்த வீதிகளை புனரமைத்து தருமாறு கிராம மக்கள் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்திருந்தனர். இருந்தும் வீதிகள் இதுவரை புனரமைக்கப்படாத நிலையில் இப்பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிலையில், அக்கிராமத்தின் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவரையும் அவரது தாயாரையும் கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் தாகாத வார்த்தைகளை பயன்படுத்தி அச்சுறுத்தியுள்ளார்.
'மக்கள் ஆர்ப்பாட்டம் செய்யும் பட்சத்தில் உன்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும்' எனவும் உபதவிசாளர் அச்சுறுத்தியதாக கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் கூறினர்.
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago