2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

கண்டாவளையில் சட்டவிரோத மண் அகழ்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கோரிக்கை

George   / 2015 ஜூன் 19 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்தில் சட்டவிரோத மண் அகழ்வு தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் இதனை கட்டுப்படுத்துவதற்கு உரிய தரப்பினர் நடவடிக்கை எடுக்கவேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப் பிரதேசத்தின் தட்டுவன்கொட்டி, ஆனையிறவு, ஊரியான், ஆகிய பகுதிகளில் சட்டவிரோதமான மணல் அகழ்வு இடம்பெறுகின்றது.  பயிர் செய்கை நிலங்கள் பொதுமக்களின் காணிகளில் இவ்வாறான மண் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இதனால் பயிர்ச் செய்கை நிலங்களில்  பயிர் செய்கை செய்ய முடியாத நிலை காணப்படுவதுடன், உவர் நீர் உட்புகும் நிலையும் காணப்படுகின்றது என மக்கள் கூறினர்

சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறும் இடங்களில் தொடர்பிலான தகவல்கள் மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்தின் பணிப்பின் பேரில் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், அதனைக் கொண்டு மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என மாவட்டச் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .