2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மீள்குடியேறியவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்குமாறு கோரிக்கை

George   / 2015 ஜூன் 19 , மு.ப. 08:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், நடராசா கிருஸ்ணகுமார்

வடக்கின் வசந்தம் திட்டத்தினூடாக இலவச மின் இணைப்பை இதுவரை பெற்றுக்கொள்ளாத மீள்குடியேறிய அனைவருக்கும் இலவச மின் இணைப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார்;, மின்சக்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கடிதம் மூலமும் தொலைபேசி ஊடாகவும் மேற்படி அமைச்சர்களை தொடர்பு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் இவ் அவசர கோரிக்கையை விடுத்துள்ளார்.

மீள் குடியமர்ந்த மக்களுக்கு வடக்கின் வசந்தம் திட்டத்தினூடாக வழங்கப்பட்டு வந்த இலவச மின் இணைப்புக்கள் இடைநிறுத்தப்பட்டதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளதென மக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் மேற்படி அமைச்சுகளிடம் இக் கோரிக்கையை விடுத்துள்ளார்

வடக்கில் இதுவரை 70 ஆயிரம் மின் இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது நடைமுறையில் இருக்கும் வடக்கின் வசந்தம் திட்டம் நிறைவுறும் போது இன்னும் 20 ஆயிரம் வரையானோர் இணைப்புக்களை பெறவேண்டியவர்களாக இருக்கின்றனர். இவர்களுக்கும் இவ் இலவச மின் இணைப்பை பெறும் வாய்ப்பை வழங்க வேண்டும். 

கடந்த காலங்களில் மின் இணைப்புக்களை வழங்கும் செயற்பாடுகள் துரிதப்படுத்தப்பட்ட போதும் அவ்வப்போது ஏற்பட்ட மின் இணைப்புக் கருவிகள் மற்றும் உபகரணங்களின் தட்டுப்பாடு காரணமாகவே குறித்த 20 ஆயிரம் வரையானோர் இணைப்புக்களை பெறமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என முருகேசு சந்திரகுமார் கூறியுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .