Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 20 , மு.ப. 07:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொக்கிளாயில் தடையுத்தரவை மீறி விஹாரை அமைக்கும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருவதாக வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், வெள்ளிக்கிழமை (19) தெரிவித்தார்.
'கடந்த வாரம், காணிப் பிணக்குகளை தீர்க்கும் பொருட்டு முல்லைத்தீவில் இடம்பெற்ற காணி அமைச்சின் உயர் அதிகாரிகளின் நடமாடும் சேவையில் மேற்படி விஹாரை அமைப்பதற்கான தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், தொடர்ந்தும் தனியார் காணியில் இவ்வாறு அத்துமீறுவது சட்டவிரோத செயல்.' என தெரிவித்தார்.
'இவ்விடயம் தொடர்பாக கரைத்துறைப்பற்று பிரதேச செயலரிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது, குறித்த பிக்குவிடம் தடையுத்தரவு நேரில் வழங்கப்பட்டதாக (எழுத்து பூர்வ தடையுத்தரவு) தெரிவித்தார்.
இதேவேளை, அங்கு விஹாரை அமைக்கும்பணி இடம்பெறுவதை நேரில் உறுதிப்படுத்த வெள்ளிக்கிழமை (19) மாலை சென்றபோது அங்கிருந்த படையினர் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர்.' என கூறினார்.
'முதலில் பிக்கு இருக்கிறார் என்று தெரிவித்து விட்டு, பின்னர் அவர் கொழும்பு சென்று விட்டதாக கூறினர்.
அதே போன்று இன்று தாம் எந்த வேலையும் செய்யவில்லை என்று படையினர் கூறியபோதும், சற்றுமுன்னர் (நேற்று) அங்கு கட்டுமானப்பணிக்கான கலவை பூசப்பட்டிருப்பது நேரில் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.' என குறிப்பிட்டார்.
'அதை நான் சுட்டிக்காட்டிய போது சிறியளவிலான வேலைகள் இடம்பெற்றது உண்மை தான் என்று படையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் தடையுத்தரவு பற்றி பிக்கு தமக்கு எதுவும் தெரிவிக்கவில்லை என்றும் படையினர் என்னிடம் கூறினர்.'
'தடையுத்தரவு அதிகாரபூர்வமாக பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு அத்துமீறுவது சட்டவிரோத செயலாகும்' ரவிகரன் என தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago